கோவை மக்களுக்கு குட் நியூஸ் அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை!!
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை!கோயம்புத்தூர் மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திட்டமிடப்பட்டுள்ளது. 61.62 ஏக்கர் பரப்பளவில், சுமார் ₹168 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட இத்திட்டம், பல வருடங்களாக முடங்கியிருந்த நிலையில், தற்போது பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன . தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர் செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்

கருத்துகள்
கருத்துரையிடுக