மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை!!


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி  மாணவர்  மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.  சென்னையைச் சேர்ந்த  ஐடியல் விங்ஸ்  நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடத்தியது. இந்தப் போட்டிகளில் பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில்  22 மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றுள்ளனர்.  பள்ளியின் ஆறாம்  வகுப்பு மாணவர் அ. ஆல்ட்ரிக் தியோ   ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.  ஓவியப்போட்டியில்  மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஆல்ட்ரிக் தியோவுக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இயக்கனர் ரா. சுதர்சன் ஆகியோர்  பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி  வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  ஓவிய ஆசிரியை சாந்தி உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள் வெற்றிபெற்ற மாணவனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!