உலக தரத்திற்கு மாறுவோம்! இனி 'ஏசி எலக்ட்ரிக்' பேருந்துகள் மட்டுமே வாங்குங்க! விஜய் போட்ட உத்தரவு!!
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் நிறைய ஏசி பேருந்துகள், இவி பேருந்துகள் வாங்கப்பட்டன. பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு நிறைய தாழ்தள பேருந்துகள் களமிறக்கப்பட்டன. அதை தொடர தற்போது தமிழக முதல்வர் விஜய்யும் முடிவு செய்துள்ளார்.தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் புதிய அதிரடி நடவடிக்கையை முதல்வர் சி. ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ளார். நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் துறையின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், "இனிவரும் காலங்களில் நகரப் பகுதிகளில் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும்போது, அவை அனைத்தும் குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்துகளாக (Electric AC Buses) மட்டுமே இருக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அவர் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக