நிலவன் டிவியின் தலைப்பு செய்திகள்!!
மேகதாது - CM விஜய்யின் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவும் கட்டாயம். ஆதார் கார்டு எண்ணை உடனடியாக இணைக்கவும் இறந்தவர்களின் ஆதார் விவரங்களை அறிக்கையாக அனுப்பவும் கூட்டுறவு துறை உத்தரவு
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை செல்லும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா தீர்ப்பு
ரூ.246 கோடி மதிப்பிலான கோயில் திருமண மண்டப பணிகள் - நிர்வாக அனுமதி ரத்து
மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும்
"தமிழக அரசு என்ன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை பார்க்க வேண்டும். தீர்மானம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்ட பின் நடவடிக்கை" - கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
4வது ஆண்டாக தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்க உள்ளார்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்த சி.மகேந்திரன் சில மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்'' -- CPI வீரபாண்டியன்
CM விஜய் தலைமையில் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக