!குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் திறன் வாய்ந்த ஆட்சிமுறையை உருவாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது! -முதல்வர். விஜய்!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் திறன் வாய்ந்த ஆட்சிமுறையை உருவாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நோக்கை வலுப்படுத்தும் வகையில், உலகத் தரத்திலான தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கும், ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான துணிகர முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும், பயன்பாட்டு ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
முதல்வர். விஜய் பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக