குடியாத்தம் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி சாமியார்மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும்  எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 அதன்படி,  காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா  7.6.2026 அன்று நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு  விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக  சேவகர் தி. நந்தகுமார் வழங்கி பேசினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!