மாம்பழம் சாப்பிட்ட இரு சகோதரிகள் உயிரிழப்பு!!
ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உறவினர் கொண்டு வந்த மாம்பழங்களை சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் தாய் மற்றும் நான்கு மகள்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17 வயதான புவனேஸ்வரி மற்றும் 10 வயதான சந்தியா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தாய் மற்றும் மற்ற இரு குழந்தைகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மாம்பழ மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணம் அறிக்கைகள் வெளியான பின்னரே உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக