கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை!!
கள்ளக்குறிச்சி மாவட்ட மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் கடலூர் மாவட்ட விருத்தாசலம், கம்மாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்களிடம் அதிகளவில் இலஞ்சம் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ஆய்வுக்குழு ஆய்வாளர் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 2,95,000/- ( ரூபாய் இரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் மட்டும்) கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக