ஆவிளிபட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடுகள் உண்டாகி வருவதால் உடனே அனைத்து சாக்கடைகளையும் முறையாக சுத்தம் செய்திட வேண்டும்! சமூக ஆர்வலர்.-தாண்டிக்குடி கணேஷ்பாபு!!
தமிழக அரசே ! அரசு அதிகாரிகளே ! அரசுக்கும் எனக்கும் பொய்யான தகவல் கொடுப்பதை விட்டு விட்டு உடனே ஆவிளிபட்டி கிராமத்தில் உள்ள அனைத்து சாக்கடைகளையும் உடனே சுத்தம் செய்து எனது கீழ்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் விசாரித்து நிறைவேற்றி விட்டு சுகாதாரச்சீர்கேடுகளை தடுத்திடவும் நடவடிக்கையுடன் உண்மையான பதில் கடிதம் அனுப்பிட உரிய நடவடிக்கை எடுத்திடு!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவிளிபட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடுகள் உண்டாகி வருவதால் உடனே அனைத்து சாக்கடைகளையும் முறையாக சுத்தம் செய்திட வேண்டும்
அதே போல் ஆவிளிபட்டி களத்துப் பட்டி பகுதியில் ரேசன்கடை அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து அடிப்படை வசதிகள் கழிப்பறை வசதி முறையாக கட்டிடம் தடுப்பு சுவர் இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது அதைசரி செய்ய வேண்டும்
அதே போல் அங்குள்ள ஆவிளிபட்டிகிராம நிர்வாக அலுவலக கட்டிடமும் மழைக்கு ஒழுகி எப்போது இடிந்து விழும் என்ற பயத்தால் இருக்கும் VAO அலுவலகத்தை அரசுபராமரிப்பு செய்யாமல் வெளியே வெள்ளை மட்டும் அடித்து விட்டு அதிகாரிகள் ஏமாற்றுவதை விட்டு உடனே அதை சீர் செய்து தரவேண்டும் VAO அலுவலகத்தின் முன்பு தற்போது சுகாதரமின்றி சமூக விரோதச் செயல்கள் தான் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது அதை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதே போல் நான் கூறிய ஆவிளிபட்டி முதல் குரும்பபட்டி சாலை தற்போது தார்சாலை அமைக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் உடனே கள ஆய்வு செய்து தரமான முறையில் தார்ச்சாலை அமைத்தால் மட்டுமே அதற்கு உரிய பில்பணத்தை வழங்கிட வேண்டும்
அதே போல் ஆவிளிபட்டி உயிர்நிலைப்பள்ளி அருகில் சாலை ஓரத்தில் உள்ள திறந்த வெளி கிணற்றைச் சுற்றி விரைவில் தடுப்புச்சுவர் அமைத்து உயிர்பலி ஏற்படாமல் தடுத்திட வேண்டும்
அதே போல் ஆவிளிபட்டி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி வேண்டும்
இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்று நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பலமுறை அரசுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் இன்னும் ஒன்றும் முறையாக நடக்கவில்லை
ஆனால் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகஅதிகாரிகள் என்னை போராட்டம் செய்ய தூண்டாமல் எனது அனைத்து மனுக்கள் மீதும் முறையாக விசாரித்து அதிகாரிகள் களஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
மேலும் நான் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் சரியாக சாக்கடையை கூட சுத்தம் செய்யாமல் சில இடங்களில் மட்டும் சாக்கடையை சுத்தம் செய்தது போல் போட்டோ மட்டும் எடுத்து விட்டு அதை அரதக்கு அனுப்பிவிட்டு அரசையும் என்னையும் ஏமாற்றி வருவதால் தான் நான் ஆவிளிபட்டி கிராமத்திற்கு நேரில் சென்று பார்த்தால் அங்குள்ள சாக்கடைகள் பல இடங்களில் சுத்தம் செய்யாமல் இருப்பதை நான் போட்டோ புகைப்படங்கள் பல எடுத்து இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இது போல் தான் தமிழகத்தில் பல இடங்களில் நடக்கிறது.
எனவே அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கொடுத்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதை முறையாக நேரில் சென்று விசாரித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து விட்டு எனக்கும் அனைத்து மனுதாரர்களுக்கும் அரசுக்கும் உண்மையான பதில் கடிதம் மட்டுமே அனுப்பிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு முறையாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உண்மையான பதில் கடிதம் மட்டுமே அதிகாரிகள் அனுப்பிட வேண்டும் அரசுக்கும் மனுதாரருக்கும் பொய்யான தகவலை அனுப்பினால் அந்தத்துறையின் அதிகாரிகள் மீது துறைநீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
இப்படிக்கு
தாண்டிக்குடி கணேஷ்பாபு சமூக ஆர்வலர்
செல் 91590 84529
இணைப்பு:
ஆவிளிபட்டி கிராமத்தில் உள்ள சுகாதார மற்ற முறையில் கழிவுநீர் தேங்கி செடிகள் சூழ்ந்து கிடக்கும் சாக்கடைகளின் அவல நிலைக்காட்சி புகைப்படங்களை பாருங்கள் உடனே நடவடிக்கை எடுங்கள்
அரசு அதிகாரிகள் ஆவிளிபட்டியில் சாக்கடைகள் முழுமையாக அள்ளாமல் போட்டோ மட்டும் எடுத்து அரசை ஏமாற்றி விட்டு சாக்கடைகள் முழுமையாக அள்ளப்பட்டதாக எனக்கு அரசு அதிகாரி அனுப்பிய பொய்யான கடித நகலை பாருங்கள் உடனே அதிகாரிகள் ஆவிளிபட்டி கிராமத்திற்கு சென்று அங்குள்ள சாக்கடைகளை பார்த்தாலே உண்மை தெரியும்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக