கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய மத முறைப்படி திருமணபதிவு சான்றிதழில் கையெழுத்துக்களை ஒருவருக்கொருவர் மாற்றி போட்டு திருமணம் நடைபெற்றது!!
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹக்கிம்-45
வயதான இவர், கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த ஷபினா பேகம் என்ற 37 வயது பெண்ணை, திருமணம் செய்து கொண்டார். இருவரும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நிலையில், இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி முறைப்படி இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். தொடர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்ள பெரியோர்கள் பேசி முடிவு செய்து, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரது வீட்டு உறுப்பினர்கள் பலர் முன்னிலையில், இஸ்லாமிய முறைப்படி, திருமண பதிவு சான்றிதழில் இருவரும் கையேழுத்து இட்டு கணவன், மனைவியாக திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில், வழக்கறிஞர் குமாஸ்தாகள் லட்சுமி, திவ்யா, செல்வராஜ், சரவணம்பட்டி கதிர் பாலாஜி, கணுவாய் டெய்லர் ஆனந்தி, கவுண்டம்பாளையம் லட்சுமி, தங்கவேல், நடிகர் ஜான், ஷாஜிதின், முகமது அலி, ரத்தினம், சங்கத்தமிழ் செல்வன், விஜயகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக