ராதிகா, ரேவதி, ரேகா, ராதா - என அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' சென்டிமென்ட் ! -இயக்குநர்.பாரதிராஜா!!
அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' வரிசை சென்டிமென்ட்! தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
கோலிவுட்டில் '16 வயதினிலே' மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என வரிசையாக பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார்.
இவரது திரைப்படங்கள் மட்டும் ஸ்பெஷலானது அல்ல. பாரதிராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்களுக்கு தமிழ் திரையுலகில் ஸ்பெஷல் உண்டு.
நடிகைகள் ராதிகா, ராதா, ரேவதி, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி ஆகியோர் பாரதிராஜாவின் அறிமுகங்கள் தான்.
திரையுலகிற்காக நிஜப் பெயரை மாற்றும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு அப்படி பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளுக்கு அவரது சாய்ஸ் 'ர' வரிசையே. அதாவது, அவர் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு அவர் 'ர' வரிசையில் இருந்து தான் பெயர்களை தேர்ந்தெடுப்பார்.
ராதிகா (கிழக்கே போகும் ரயில்),
ராதா (அலைகள் ஓய்வதில்லை),
ரேவதி (மண்வாசனை)
ரேகா (கடலோர கவிதைகள்)
ரஞ்சிதா (நாடோடி தென்றல்)
பாரதிராஜாவிற்கு 'ர' வரிசையில் சென்டிமென்ட் இருந்திருக்கலாம் என்பது தான் நடிகைகளின் பெயருக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 16 வயதினிலேயில் என்ட்ரி: 'எனக்கு முகவரி கொடுத்தவர்' - பாரதிராஜாவுக்கு கவுண்டமணி இரங்கல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் '16 வயதினிலே'. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது.
அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்கெனவே தமிழ் திரையுலகில் 'பீக்'கில் இருந்தாலும், இந்தத் திரைப்படம் அவர்களுக்கு புதிய கோணத்தைத் தந்தது.
அதே மாதிரி '16 வயதினிலே' செய்த பல சாதனைகளில் ஒன்று, தமிழ் திரையுலகிற்கு சிறந்த நகைச்சுவை நடிகரான 'கவுண்டமணி'யை தந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு நகைச்சுவை ரோல் அல்ல. நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரம்.
இன்று பாரதிராஜா காலமானார். அவர் குறித்து நடிகர் கவுண்டமணி பகிர்ந்துள்ளதாவது...
"பதினாறு வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்". எனத் தெரிவித்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக