ப்ரைட்ஸ் ஆப் ப்ரஸ்டீஜ் அவார்ட்ஸ் அங்கீகார கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ இந்தியா அரங்கில் விருதுகள், மற்றும் பட்டங்கள் வழங்கும் விழா!!
கோவை மாவட்டம்,கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள் கோ இந்தியா அரங்கில், ப்ரைட்ஸ் ஆப் ப்ரஸ்டீஜ் அவார்ட்ஸ் அங்கீகார கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களுக்கு அவர்களின் சாதனையை போற்றும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, ரைட்ஸ் இண்டர்நேஷனல் க்ரூப் அமைப்பின் துணைத்தலைவர், பாலசுப்பிரமணியம்,ஆல் இந்தியன் ப்ரைவேட் யுனிவர்சிட்டி அசோசியேஷன் டீன் மகேந்திர குமார், ஸ்பெக்டர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனர் ரங்கசாமி, ஸ்பெக்டர்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா, அக்ரோ மெட்லேப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் ராஜேஷ்குமார், மற்றும் டான்ஸ் அகாடமி ஹனிதா பாலாஜி, டாக்டர் தயாளன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பலதுறையில் சாதனைகள் படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள், பட்டங்கள், விருதுகள் வழங்கி பெருமை படுத்தினர். முன்னதாக டாக்டர் மகேந்திர குமார் எழுதிய ஷார்ட் டெம்பர் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 6 நபர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக