நத்தத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் நடைபெற்ற பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தீயணைப்பு துறை சார்பில் அலுவலக வளாக அரங்கில் வாங்க கற்றுக் கொள்வோம்.
தீ பாதுகாப்பு அறிவோம்! உயிர்களை காப்போம்! என்ற திட்ட செயலாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்கான தீ தடுப்பு விழிப்பு முகாம் நடந்தது இதற்கு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட வீரர்கள் குழு விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர். இதில் தீ தடுப்பு சாதனங்களின் பயன்பாடு அவற்றின் செயல்முறைகள் குறித்தும், மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர், எலெக்ட்ரிக் வயர் ஆகியவைகளில் தீப்பற்றும் போது சாதனங்களை பயன்படுத்தி தீ பரவுவதை தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறி விளக்கம் அளித்தனர். மேலும் அதுகுறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக