பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகம் அருகில் கழிவுநீர் சாலையில் பாய்ந்தோடும் அவலம் - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகம் மற்றும் வேளாண்மை அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், துணி துவைக்கும் நீர், பாத்திரம் கழுவும் நீர் ஆகியவை கால்வாய் அடைப்பு காரணமாக வெளியேறி நெடுஞ்சாலைத்துறை சாலையை குறுக்கே கழிவு நீர் கடக்கிறது.

இதனால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் தெறித்து சென்னை கே.ஜி.எப் சாலை வழியாக கடந்து செல்பவர்கள், மீதும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியால் சுற்றுப்புற மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சாலையை கடக்காமல் மாற்று வழி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!