கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இளைஞர்கள். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். சம்பத் குமாரிடம் தவெக அடிப்படை உறுப்பினர் அட்டைகளை பெற்றனர்!!

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில், தமிழக வெற்றி கழக கோவை கிழக்கு மாவட்டம் சார்பில், 

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளான  பாலமுரளி, கிருஷ்ணன் மற்றும் அபய் கிருஷ்ணன், தலைமையில்

மாபெரும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர்,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் முன்னிலையில்

தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ், சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கிரி பிரசாத், பகுதி செயலாளர், சரத்குமார் 

தவெக நிர்வாகிகள் வைரமணி, போனஸ் பாபு, உமா மகேஷ்வரி, மணிகண்டன், அமிர்தலிங்கம், இந்திராமணி, ஜார்சல் பீட்டர், நாகராஜ், சுரேஷ்பாபு, புவனேஷ்ராஜ் மற்றும் தமிழக வெற்றிக்கழக  நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர் முன்னதாக விழாவில் கலந்து கொண்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாருக்கு உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்த்து மாற்று கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தமிழக வெற்றிக்கழக அடிப்படை உறுப்பினர் அட்டைகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார் கூறியதாவது..

அனைத்து கட்சியினரும் நமது தவெக கட்சியில் இணைந்துள்ளனர் அவர்களுடன் இணைந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு. க ஸ்டாலின் தவெக கட்சியை தீர்ந்து போன கட்சி, இங்கு இதற்க்கு மேல் சரக்கு இல்லை என்று கூறி வருகின்றார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.. அமைச்சர் கூறியதாவது.. 

தீர்ந்து போன கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும், 2024 கட்சி ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து தான் வந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் மக்களுக்கு சேவை யாற்றவே நாங்கள் வந்துள்ளோம் இது மாதிரியான விஷயங்களை தவெக ஒருபோதும் காதில் போட்டு கொள்ளாது என்றார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!