சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை!!
சிவகங்கை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு இன்று அதிகாலை அவரது ஆண் நண்பரின் நண்பர்கள் இருவர் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பியோடிய பெண் காவலர், உடனடியாக அவசர உதவி எண்ணான '100'-ஐத் தொடர்பு கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இப்புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண் காவலரை மீட்டதுடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக