உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு!!


மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற  திருமுருகன்  திருக்கோவில்  அமைந்துள்ளது.இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு  புரணமைப்பு பணிக்கள் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள்  யாகசாலை பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து சிவாச்சாரியார்கள், மூலஸ்தானம் கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு பூஜைகள் செய்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி  கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இதில்,  கருவறையில் உள்ள  முருகனுக்கு  பால், தயிர்,இளநீர்,சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் திருமுருகன்  சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.இதில் ,உசிலம்பட்டி மற்றும்  சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.தொடர்ந்து , தனியார் திருமண மண்டபத்தில்  ஏராளமான பொது மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு  உணவு அருந்தி சென்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!