நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

📰 அடுத்து தேர்தல் எப்போது வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என மு.க.ஸ்டாலின் உறுதி. பாஜகவின் நகல் போல முதலமைச்சர் விஜயின் செயல்பாடு உள்ளதாகவும் கடும் விமர்சனம்.

📰 அதிமுக முன்னாள் எம்.பி-க்கள் பாலகங்கா, வனரோஜா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்ட பாலகங்கா பேனரை கிழித்தெறிந்து அதிமுகவினர் ஆவேசம்

📰 தவெக அரசின் தவறுகளை இன்ஸ்டா, ரீல்ஸ் மூலமே சுட்டிக்காட்ட அதிமுகவினருக்கு பழனிசாமி அறிவுரை. அடுத்தது தேர்தல் எப்போது வந்தாலும் தவெக தோல்வியடையும் என்றும் உறுதி.

📰 வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டிய கனமழை. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.

📰 தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் சதமடித்த வெயில். மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு.

📰 சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது. மூன்று பேரின் பிடியில் இருந்து தப்பித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் நடவடிக்கை.

📰 சேலம் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல். தவெக ஆதரவாளரை தீவிரமாக விசாரித்து பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிய டிடிவி. தினகரன் கோரிக்கை.

📰 கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கல்லூரி மாணவி, அவரது தாய் மீது தாக்குதல். 9 பேர் கொண்ட கும்பல் மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்.

📰 தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது. நாளை காலை முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்.

📰 பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வலுக்கும் போராட்டம். தமிழ்நாட்டில் எங்குமே விவசாயிகள் போராடவில்லை என அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியதால் அதிர்ச்சி.

📰 மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தவெக தடுக்கவில்லை என பழனிசாமி குற்றச்சாட்டு. தவெக அரசு டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்துக்கும், துன்பத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கவலை.

📰 மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு ஒரு கல்லைகூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸை சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.

📰 எந்தவொரு அரசியல் கட்சியோ, அமைப்போ நடிகர் ரஜினிகாந்த் படத்தை பயன்படுத்தக்கூடாது. அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் எச்சரிக்கை.

📰 சென்னை திருவொற்றியூரில் தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு. கதவுகள் திறக்கப்படாததால் 15 நிமிடம் ரயிலுக்குள்ளேயே தவித்த பயணிகள்.

📰 செங்கல்பட்டு அருகே அதிவேகமாக சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற விவசாயி பலியான பரிதாபம்.

📰 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 மற்றும் 9ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம். குறைந்தபட்சம் ஒரு பிரிவிலாவது சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது கட்டாயம் என அறிவிப்பு.

📰 அசாமில் தரையிறங்கும்போது விமானப்படை விமானம் வெடித்து விபத்து. அக்னி வீரர்கள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு.

📰 பாட்னாவில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற சிறுமிகள்.கடை உரிமையாளரின் முகத்தில் pepper spray அடித்து திருட முயன்றபோது சிக்கினர்.

📰 ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. மாநாட்டுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசுகிறார்.

📰 அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு. ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனவும் தகவல்.

📰 அல்பேனியாவில் அதிபர் டிரம்ப் மருமகன் கட்டும் சொகுசு விடுதிக்கு வலுக்கும் எதிர்ப்பு. வேலியை உடைத்தெறிந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றதால் மோதல்.

📰 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கத்தார் - சுவிட்சர்லாந்து இடையேயான போட்டி டிரா. கடைசி நிமிடத்தில் கத்தார் வீரர் அடித்த அசத்தலான கோலால் சமனில் நிறைவு.

📰 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா.

📰 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல். தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானை வீழ்த்த தீவிரம்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!