உலக சுற்றுச்சூழல் தினம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு எஸ்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளி ஆசிரியர் செயலர் C.ரத்ன பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் V. லோகநாதன் கலையாசிரியர்முத்துக்குமரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. அ. ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ நன்றி கூறினார்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக