கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை..மதுபான விலை உயர்வு?
முதலமைச்சர். விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் மிக முக்கிய நிதி ஆதாரங்களை முறைப்படுத்துவதிலும், வருவாயைப் பெருக்குவதிலும் தற்போது தீவிரமான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றின் மீது புதிதாக கூடுதல் கட்டணத்தை (Additional Fee) அரசு அதிரடியாக விதித்துள்ளது.இந்த புதிய கொள்கை முடிவின் மூலம், அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் நேரடியாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த அதிரடி கட்டண விதிப்புக்கு பின்னால் ஒரு மிக முக்கிய வர்த்தக காரணம் ஒளிந்துள்ளது. மதுபானத் துறை வட்டாரங்களின்படி, இந்த புதிய கட்டணமானது உண்மையில் உற்பத்தியாளர்களால் ஏற்கனவே தங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை விலையில் சேர்க்கப்பட்டிருந்த'இன்புட் காஸ்ட்' (Input Cost) தான், விஜய் அரசின் இந்த திடீர் கட்டண விதிப்புக்கு மைய காரணமாக உள்ளது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக