கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடைபெற்ற தற்காப்பு கலை பயிற்சி முகாம், மற்றும் பல்வேறு தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!!

கோவை மாவட்டம்,கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின், சார்பாக, ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் தற்காப்புக் கலையில்  பல்வேறு தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் சென்சாய் சதீஸ், மற்றும் துணைத் தலைவர் சேகர், மற்றும் செயலாளர் சபரிஸ், துணைச் செயலாளர் பால மணிகண்டன்  ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேரூர் பேரூராட்சி, 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பேரூர் மயில், தமிழக வெற்றிக் கழகம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருங்காலத்தில் மிகச்சிறந்த மாணவராகவும்  சிறந்த விளையாட்டு வீரராகும் உருவாக மாணவ மாணவியர்கள், தற்காப்பு கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அதனை பெற்றோர்கள் ஆதரித்து மாணவர்களை ஊக்க படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் தலைமை பயிற்சியாளர் சென்சாய் சதீஸ் தொடர்ந்து அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!