தென்காசியில் படுகொலை!!
தென்காசி கரடிகுளத்தில் லாரி டிரைவர் மாரிமுத்து தலை முழுவதும் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை பைக்கில் சென்றவரை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர். கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு. குழந்தை கடத்தல் பகீர் திருப்பம் குழந்தை கடத்தல் என பரவிய தகவலில் திடீர் திருப்பம் செல்போனில் மூழ்கியதால் கணவன், மனைவி இடையே பிரச்சினை. குடும்ப சண்டையில் பாட்டியிடம் இருந்து 4 வயது குழந்தையை திருநங்கைகளுடன் வந்து தூக்கிச் சென்ற தாய் சாத்தான்குளம் வழக்கில் அதிரடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொ*ல வழக்கில் கைதான 5 முன்னாள் காவலர்களின் மனுவும் தள்ளுபடி "குற்றவாளிகளுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க முடியாது" மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திட்டவட்டம் "பாகுபாடு எல்லாம் இருக்காது" "தவறு யாரு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி நிர்வாகி என்ற பாகுபாடு எல்லாம் இருக்காது. இடைத்தேர்தலில் யார் போட்டி என்று இப்போது பதில் சொல்ல முடியாது. அதற்கு காலம் இருக்கு. முதல்வர் முடிவு எடுப்பார்"
- அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் விஜய் உத்தரவு "பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு" 121 நாட்களுக்கு அணைகளில் இருந்து 6086.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க முதல்வர் விஜய் உத்தரவு! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இருப்பை பொறுத்து தண்ணீரை திறந்து விட முதல்வர் விஜய் உத்தரவு டிரம்ப் கண்டனம் "இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈரான் தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்" ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக