பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கோவை தடாகம் சாலை, கோவில் மேடு புறக்காவல் நிலையத்தை அந்த பகுதியில் இருந்து எடுக்கப் வேண்டு்ம் என்று கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனு அளித்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினர்!!
கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின், கோவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இக்கட்சியின் மாநில துணைத் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.. கோவை மாவட்டம் தடகம் சாலை, கோவில் மேடு பேருந்து நிறுத்தம் அருகில், சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதன் அருகில் இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த புறக்காவல் நிலையம், அருகே நான்கு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பகுதியில், இன்று வரை எந்தவித குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. ஆயினும் இந்த புறக்காவல் நிலையத்தின் முன்பாக, மாலை 4 மணி முதல், இரவு 8 மணி வரை அனைவரின் வாகனத்தையும் நிறுத்த சொல்லி வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர். சில நேரங்களில் வாகனங்களின் சாவிகளை பிடுங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியும் வருகின்றனர். இரண்டு மதுபான கடையின் அருகில் புறக்காவல் நிலையம் இருப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனவே இந்த பகுதியில் உள்ள இரண்டு மதுபான கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும், அல்லது இந்த புறக்காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார் . மனுவை பெற்று கொண்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக