புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் சாவி ஒப்படைப்பதில் தொடரும் இழுபறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு!!


புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட அசோக் நகரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினருக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினரால் அதிமுக மாவட்ட அலுவலகம் பூட்டப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியரிடம் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து மாவட்ட அதிமுக அலுவலகத்தை திறக்க தங்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.இந்நிலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று.

இந்த பேச்சுவார்த்தைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல், அதிமுகவினர் தரப்பிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் மாவட்ட நிர்வாகத்தையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் கண்டித்து அலுவலகத்துக்கு உள்ளேயே கோஷங்களை எழுப்பினர். இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

அதிமுக அலுவலகத்தின் சாவியை இன்று எங்களிடம் முறைப்படி ஒப்படைக்கவில்லை என்றால் நாங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என புதிய வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தரப்பினர் ஆக்ரோஷத்துடன் கூறினர். இதையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் இதில் விஜயபாஸ்கர் தரப்பு பங்கேற்கவில்லை என்றால் இபிஎஸ் தரப்பிடம் அலுவலக சாதி ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சாவியை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு தெரிவித்தார்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!