அடையாளம் தெரியாத இரண்டு ஆண் சடலம் அடக்கம்!!

வேலூர் மாவட்டம்,மே மாதம் 6 தேதி மற்றும் 15ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில்  வாலாஜா மற்றும் சோளிங்கர்  பகுதிகளில் ரயில்வே பாதையில் ரயிலில் அடிபட்டு  சுமார் 50 முதல் 55 வயது  மதிக்கத்தக்க  ஆண் சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு சடலங்களையும் காட்பாடி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு . அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கள் வைத்தனர் .. அவர்களைப் பற்றி விளம்பரம் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க சாசனத் தலைவரும் உயிர் அறக்கட்டளை நிறுவனமான சமூக சேவகர் ரொட்டேரியன் எம் கோபிநாத் அவர்களை தொடர்பு கொண்டு இரண்டு உடலை அடக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தார்.

உடனடியாக  ரோடேரியன் எம். கோபிநாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைப் பெற்றுக் கொண்டார். இறந்தவரின் உடலை  சமூக சேவகர் எம்.கோபிநாத்    வேலூர் மாநகராட்சி வழிகாட்டுதலின்படி   உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் அவரது சொந்த செலவில் வேலூர் பாலாறு இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார். 

காட்பாடி ரயில்வே போலீஸ் சக்திவேல் கோபிநாத்துக்கு தேவையான ஆவணங்களை வழங்கினார்.

இங்ஙனம் கண்கள் உடல்தான சேவையில்

RTN  MGN@ M.GOPINATH  

              நிறுவனர்

உயிர அறக்கட்டளை

       தலைவர்

கண்/உடல்தானம்

     குடியாத்தம்

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!