நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

📰  தமிழ்நாட்டில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள். டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக வேதனை.

📰  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை. டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை.

📰  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திடீர் மின் தடை. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மின்தடை இருந்ததால் பக்தர்கள் கடும் அவதி.

📰  அம்பத்தூர் அருகே திமுக பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே  மின் இணைப்பு துண்டிப்பு. செல்போனில் டார்ச்லைட் அடித்தவாறு தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட திமுகவினர்.

📰  தவெக அரசு அறிவித்த மதுக்கடைகளை மூடாததால் தீவிரமடையும் போராட்டம். செங்கல்பட்டு, பல்லடம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

📰  முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணை. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

📰  கோவையில் கோயில் பிரசாதம் தருவதாகக்கூறி பெண் கடத்தல். நகைக்காக காரில் கடத்திச் சென்ற தம்பதியை கைது செய்த போலீசார்.

📰  மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் விமரிசையாக நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அம்மனுக்கு வழிபாடு.

📰  முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு. நாமக்கலில் ஒரு முட்டை விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம்.

📰  கோவை அருகே பள்ளி தோழியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகைகள் பறிப்பு. பெண்ணின் நண்பர்கள் 2 பேரை கைது செய்த போலீசார்.

📰  மத்திய பிரதேசத்தில் ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கீழே இறங்கி நின்ற போது மற்றொரு ரயில் மோதி கோர விபத்து.

📰  திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 20 அதிருப்தி எம்.பி.க்களும் திரிபுராவைச் சேர்ந்த மாநில கட்சியில் இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க நடவடிக்கை.

📰  டெல்லியை தொடர்ந்து பெங்களூரு, ஐதராபாத்திலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ முறைகேடு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி வலியுறுத்தல்.

📰  இந்திய ராணுவத்திற்கான சீருடையில் இருந்த பிரிட்டிஷ் கால மரபுகள் நீக்கம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பண்டி என்ற ராணுவ உடை அறிமுகம் 

📰  ஆந்திராவில் சீசன் இருந்தும் விலை போகாத மாம்பழங்கள். உரிய விலை கிடைக்காததால் சாலையோரத்தில் கொட்டிச் செல்லும் விவசாயிகள்.

📰  தெற்கு லெபனான் மீது இஸ்‌ரேல் தொடர் தாக்குதல். அமெரிக்கா, ஈரான் இடையேயான ஒப்பந்தம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு.

📰  அமெரிக்காவில் ஸ்கை டைவர்கள் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து. விமானம் தீப்பிடித்ததில், பைலட் உள்பட 12 பேர் உயிரிழப்பு.

📰  ஜி-7 உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா நகரில் போராட்டம். கார்களுக்கு தீ வைக்கப்பட்டதால் போராட்டம் வன்முறையில் முடிந்தது.

📰  ஐசிசி உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!