தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அரசு இணையமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அரசு இணையமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!!
அண்ணாமலையின் பதவி விலகல் விவகாரம் மற்றும் தமிழக பாஜகவின் உட்கட்சி நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, நயினார் நாகேந்திரனை பாஜக தேசியத் தலைமை அவசரமாக புது டெல்லிக்கு அழைத்தது.
டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் கட்சியின் வியூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மத்திய இணை அமைச்சர் (Union Minister of State) பதவி வழங்க கட்சித் தலைமை முன்வந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
நயினார் நாகேந்திரன் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக