புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளை முழுவதுமாக கலைக்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்! -புதுக்கோட்டையில் தவெக வேட்பாளர். கே எம். சரீப் பேட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,நாங்கள் தப்பு நடந்திருக்கிறது என்று சொல்வதைவிட தேர்தல் ஆணையம் எண்ணிக்கை கணக்கிலேயே குளறுபடிகள் இருக்கிறது. 

அதை ஆதாரமாக எடுத்து நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்களது கோரிக்கையோடு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை வெளியிட்டதில் குளறுபடிகள் இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம்.

எங்களது கோரிக்கை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதுதான். எங்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

 கண்டிப்பாக உயர்நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடும் என்று நம்புகிறோம் என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!