குடியாத்தம் அருகே லாரி மோதி டிரைவர் பலி!மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் பரிதாபம்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பட்டியல் தெரு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் அசோகன் 31 , குடியாத்தம் தனியார் ஏஜென்சில் வேன் டிரைவராக இருந்தார்
நேற்று திடீரென அசோகனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது ,
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை காக்க வைத்ததாக கூறப்படுகிறது.
வலிப்பு ஏற்பட்ட உடல் வலியால் அசோகன் வழி தாங்க முடியாமல் மருத்துவமனையை விட்டு அங்கிருந்து வெளியேறி பஸ் நிலையம் பகுதிக்கு வேகமாக ஓடி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறை லாரி டிரான்ஸ்பார்ம் ஏற்றி சென்றுள்ளது.
அதன் சக்கரத்தில் அசோகன் சிக்கி உள்ளார்
அதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்
இதனை அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு.
பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் சாலையில் விபத்தால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக