குற்றாலம் பேருந்து நிலையத்தில் கழிப்பிட கதவு பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடம் செல்ல முடியாமலும் தவிப்பு!!


தென்காசி மாவட்டம், குற்றாலம். தென்மேற்கு பருவமழை அண்டை மாநிலமான கேரளாவில்  ஆரம்பித்து விட்டதால் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலம் சீசன் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஒரு பரபரப்பான நகரம் அப்படிப்பட்ட நகரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் இலவச கழிப்பிடம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்று சிறிய அறிவிப்பு நோட்டீஸ் ஓட்டப்பட்டு கழிப்பிட கதவு பூட்டப்பட்டுள்ளது இதனால் பேருந்து நிலையத்தில் வரும்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடம் செல்ல முடியாமலும் சிறுநீர் கழிக்க முடியாமலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிஉள்ளனர் உடனடியாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சீசன் காலம் என்பதால் இந்தக் கழிப்பிடத்தை 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!