புதுக்கோட்டை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். நாகபட்டினம் மாவட்டம் அக்வாடிக் அசோசியேசன் பிஆர்ஒய் நாகட்டினம் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி எம். சந்தோஷிகா 25 மீ பிரஸ்ட் ஸ்ரோக், 50மீ பட்டர்பிளை, 25மீ பிரீ ஸ்டைல் ஆகிய போட்டிகளில் முதலிடமும், 25 மீ பட்டர்பிளையில் இரண்டாம் இடமும், 50மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ. பிரீஸ்டைல் ஆகிய போட்டிகளில் மூன்றாம் இடமும், பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டமும், பரிசுகளும் வென்றார்.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் எம். நிஷாந்த் கிருஷ்ணன் 50மீ. ஃபிரீ ஸ்டைல் போட்டியில் மூன்றாமிடமும், 50மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் மூன்றாமிடமும், 100மீ பிரஸ்ட் ட்ரோக் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் சாம்பியன் பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக