வாலாஜா நகராட்சி நிர்வாகத்தில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை அலுவலகத்தின் நூல் கையொப்பமிட விடாமல் வெளிப்புறங்களில் இருக்கும் கடைகளில் கையொப்பமிட செய்து தீண்டாமை பார்ப்பதாகவும் நகராட்சிக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது மட்டும் நகராட்சி என்னுள் கையொப்பமிட அனுமதிப்பதாகவும் மேலும் மத ஊதியத்தை மாதம் முதல் 10 நாட்களில் வழங்காமல் 20 நாட்களுக்கு மேல் கடந்து வழங்கப்படுவதாகவும் அதுவும் நேரடியாக ஊதியம் வங்கி கணக்கில் வழங்கப்படுவதில்லை எனவும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க சென்றார் அவர்கள் என் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தூய்மை பணியாளர்களின் நலனை காக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுடன் அமர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக