தாக்குதல் நடத்தப்போவதில்லை!!


"ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரான் மீது இன்று நடைபெற இருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளேன்" - டிரம்ப் CM விஜய் நிதியுதவி மன்னார்குடியில் சாலை விபத்தில் 3 மாணவர்களும், உளுந்தூர்பேட்டையில் சாலை விபத்தில் 2 மாணவர்களும் பலியான விவகாரம் "உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. படுகாயமடைந்த மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி" காயமடைந்த மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க CM விஜய் உத்தரவு

"நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கையாளுதல் தொடர்பாக ஆலோசித்தோம். சீர்திருத்தப் பயணத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேசினேன். தேசிய முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு. கூட்டுறவு கூட்டாட்சி முறை மீதான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்" நிதி ஆயோக் கூட்டம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு மூவரை பிடித்த சிங்கப்பெண் அதிரடிப்படை சென்னை, பெரம்பூரில் 3 இளைஞர்கள் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்வதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவு. 3 பேரை பிடித்த சிங்கப்பெண் அதிரடிப்படை பெரம்பூர் காவல் நிலையத்தில் 3 இளைஞர்களிடம் விசாரணை ``மனித தவறு கிடையாது'' “சிங்கப்பெண் AI வீடியோவில் பிழை - மனிதர்கள் செய்த தவறு கிடையாது. தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது“ - கோவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி இருவேறு சாலை விபத்து மன்னார்குடி காரக்கோட்டையில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 மாணவர்கள் பலி உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சாலையை கடக்க முயன்ற மாணவர்கள் மீது கார் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

தேனி, காட்ரோட்டில் உள்ள பண்ணையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் பிரதமர் மோடி இரங்கல் "பாரதிராஜாவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. பாரதிராஜா தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கியவர். அவர் தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார்" - இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் "பாரபட்சமின்றி நடவடிக்கை" "சட்டவிரோத கல்குவாரிகள் மீதும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை . டிப்பர் லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றக்கூடாது. ஜல்லி, எம்.சாண்ட் - அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் வெடிப் பொருட்களை பதுக்கக் கூடாது"

- கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் பிரபு எச்சரிக்கை குருவுக்கு முத்தம்..! தன் குருநாதரான இயக்குநர் பாரதிராஜா கன்னத்தில் முத்தம் கொடுத்து அஞ்சலி செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ``அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்'' "அதிமுக உடன் சேர வேண்டும் என அமமுக நிர்வாகிகள் கோரிக்கை வைக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அம‌முக உள்ளது. இந்த கடினமான காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்" அதிமுக உடன் அம‌முக இணைக்கப்படுமா? - டிடிவி தினகரன் விளக்கம் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு, கலால் வரி ரத்து. ``20%க்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி முற்றிலும் நீக்கம். 22%, 25%, 27%, 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி ரத்து'' - மத்திய அரசு, எத்தனால் கலந்த E30 பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு. 30% எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.90 வரை குறைய வாய்ப்பு. 

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!