மாவட்ட ஆட்சியரிடம் தனியார் பள்ளி ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி கட்டிடம் மற்றும் உரிமையை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்... உரிய நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க கோரிக்கை!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியரக காயிதே மில்லத் கூட்டரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறைதீரு நாள் கூட்டத்தில் புகார் மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளியின் உரிமையாளர் ஜூவப்பீரியா லோகநாதன், தனது பள்ளி கட்டிடம் மற்றும் பள்ளி நிர்வாக உரிமையை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"நான் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். எனக்கு வாரிசுகள் யாரும் இல்லை. எனது தாயாரின் உதவியுடன் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளியை நடத்தி வந்தேன். உடல்நலக் குறைவு காரணமாக பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், 01.05.2023 முதல் 30.04.2026 வரை மூன்று ஆண்டுகளுக்கு பள்ளி நிர்வாகத்தையும் கட்டிடத்தையும் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோருக்கு குத்தகைக்கு வழங்கினேன்.

அவர்கள் ஒரு ஆண்டுக்கான வாடகையை மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கான வாடகையை செலுத்தவில்லை. மேலும் பள்ளி கல்வித்துறை விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதுடன், பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்காமலும் பள்ளியை நடத்தி வந்தனர். குத்தகைக் காலம் முடிவடைந்ததால் பள்ளி கட்டிடத்தையும் நிர்வாகத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டபோது, குத்தகை ஆவணத்திற்கு முன்தேதியிட்டு போலியான ஆவணங்களை தயாரித்து ஆறு ஆண்டுகளுக்கு குத்தகை பெற்றதாக கூறி மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளை பேசி என்னை துன்புறுத்தலுக்கு ஆளாக்கி துன்புறுத்தலுக்கு ஆளாக்கி தள்ளிவிட்டனர். இதனால் நான் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

தற்போது போலியான குத்தகை ஆவணத்தை பயன்படுத்தி என்னை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்து, குண்டர்கள் மூலம் மிரட்டுகின்றனர். எனது வாழ்வாதாரமான ஒரே சொத்தான பள்ளியையும் அதன் நிர்வாகத்தையும் அபகரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பள்ளியையும் நிர்வாகத்தையும் மீட்டுத் தர காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர்,  காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!