நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
10.06.2026
📄 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.இலச்சினை மற்றும் ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்து ஜீப்பை ஓட்டிப்பார்த்தார்.
📄 சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக 2 ஆயிரத்து 500, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் முன் தடுக்கும் நடவடிக்கையில் சிறப்புப் படை ஈடுபடும் என்றும் உறுதி.
📄 சிங்கப் பெண் திட்ட தொடக்க விழாவில் தவறுகளுடன் வெளியிடப்பட்ட ஏ.ஐ. வீடியோவால் சர்ச்சை. தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் எழுத்துகள் தவறுதலாக இருந்ததால் அதிர்ச்சி.
📄 நேற்று இரவு சென்னை, திருவள்ளூரில் பரவலாக பெய்த மழை. இதனால் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது.
📄 குற்ற வழக்கை மறைத்ததாக பாஜக ஆட்சேபனை கூறியதை தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு.
📄 அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் தாக்கியதால் மீண்டும் போர் பதற்றம். ஈரான் தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை.
📄 ஜப்பானை தொடர்ந்து நேபாளத்திலும் இந்திய மாம்பழங்களுக்கு தடை. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ரசாயன பூச்சிக்கொல்லி இருப்பதால் நடவடிக்கை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக