உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆட்சியர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டது!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரியா தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்தின் சீல் திறக்கப்பட்டு வாகனத்தில் இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்களின் பெட்டிகளை ஒவ்வொன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஸ்ட்ராங் ரூம் )வைப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் அறையை பூட்டி சீல் வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக