ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு காரணமாக பள்ளி மாணவி பேருந்து மற்றும் சாலை தடுப்பு சுவர் இடையே சிக்கி அலறி துடித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் போதிய இட வசதிகள் இல்லாத நிலையில் பேருந்துகள் அனைத்தும் வந்து  பயணிகளை ஏற்றி கொண்டு குறுகிய இடத்தில் திரும்பி எதிர்சாலையில்  சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் பேருந்து ஒன்று ஆற்காடு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சோளிங்கர் நோக்கி செல்வதற்கு குறுகிய இடத்தில் பேருந்து திருப்பிய போது சாலையின் நடுவே இருந்த தடுப்பின் அருகாமையில் நடந்து சென்ற தனியார் பள்ளி மாணவி இருப்பதை கவனிக்காமல் பேருந்து இயக்கியதால் மாணவி பேருந்து மற்றும் சாலை நடுவே இருந்து தடுப்புக்கு இடையே சிக்கி அலறி கூச்சலிட்டு உள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பேருந்தை நிறுத்த செய்து பேருந்து மற்றும் தடுப்பு சுகருக்கு இடையில் சிக்கிய மாணவியை பத்திரமாக மீட்டெடுத்தனர் இந்த விபத்து சம்பவத்தில் மாணவிக்கு பெரிய அளவில் எதுவும் காயங்கள் ஏற்படவில்லை இருப்பினும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக பேருந்து இயக்கி இருக்கும் சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனம் எழுந்து வருகிறது

மேலும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பேருந்துகள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையானது எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!