நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!


நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!! 

 12.06.2026

🗞️ நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு. நிபந்தனைகள் ஏதுமின்றி ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தல்.

🗞️ கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம். ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வளம் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு.

🗞️ குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்துவிடாததால் விவசாயிகள் கவலை. காங்கிரசிடம் கூட்டுவைத்து கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றுதராமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றுவதாக கண்டனம்.

🗞️ பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம். முதலமைச்சர் விஜய் மவுனம் காத்து ஏமாற்றுவதாக விவசாயிகள் ஆவேசம்.

🗞️ மெக்சிகோவில் கோலாகலமாகத் தொடங்கியது உலகக் கோப்பை கால்பந்து போட்டி. கண்கவர் கலை நிகழ்சிகளால் பார்வையாளர்கள் உற்சாகம்.


தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!