கோவையின் புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் துவக்கவிழா பிரபல ஹரிபவனம் நிறுவனத்தின் சார்பாக ஆ ‘குரோசர் சென்ட்ரல்’ எனும், சூப்பர் மார்க்கெட் துவக்கவிழா நிகழ்ச்சி கோவை விமான நிலையம் அருகே நடைபெற்றது!!

கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தற்போது தனது புதிய முயற்சியாக ‘குரோசர் சென்ட்ரல்’  என்ற நவீன சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளது.

இது குறித்து ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உணவகத் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். எங்கள் உணவகங்களில் எப்போதும் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கி வருகிறோம். அதே தரத்தையும் நம்பகத்தன்மையையும் தற்போது உணவுசமைக்க தேவையான பொருட்கள் மற்றும்  வீட்டிற்கு பொருட்களை  குரோசர் சென்ட்ரல் மூலம் நேரடியாக மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம் . உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மசாலா பொருட்கள், தினசரி பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஒரே இடத்தில் தரமான முறையில் வழங்க உள்ளோம். கோவை மக்களுக்கு ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டை விட, குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் முழுமையான ஷாப்பிங் மையத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தரமான பொருட்கள், நியாயமான விலை, சிறந்த சேவை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஒருங்கிணைத்து புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உள்ளோம், என்றார். மேற்கத்திய நாடுகளின் நவீன சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இணையான உட்புற வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குரோசர் சென்ட்ரல், சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் வளாகத்தில், இரண்டு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் 

ஹரிபஹவனம்  குழுமத்தின் தலைவர் பாலசந்தர், குரோசர் சென்ட்ரல் இயக்குனர்கள் கவிதா பாலசந்தர், ஹரிணி பாலசந்தர், பிரியங்கா ராஜு, மற்றும் அவரது குடும்பத்தினர் ருக்மணி, சுப்பு லக்ஷ்மி, அங்கப்ப கவுண்டர், சபரிநாதன் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!