குடியாத்தத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் மற்றும் அன்புமணிக்கு நன்றி தெரிவித்து பாமகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று தமிழக  ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வரவேற்ற அன்புமணி இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மயில்கல் என்றார் மேலும் இது ஒரு சாதிக்கான பிரச்சனை அல்ல தமிழகத்தின் சமூக நீதி பிரச்சனை இந்த சர்வே எடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வளரும் என தெரிவித்த அன்புமணி வரவேற்பு தெரிவித்து இருந்தார்.

 இதனையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சாதிவாரி கணக்கெடுக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் நன்றி தெரிவித்து பாமகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!