குடியாத்தத்தில் மசூதிக்கு சொந்தமான இடத்தில் சுற்று சுவர் கட்டுவது சம்பந்தமாக இரு இரு தரப்பினரிடம் ஏற்பட்ட பிரச்சனை!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம்  மற்றும் நகரம், வார்டு 5 பிளாக் 9 சர்வே எண் 710 /1, பரப்பு 1.3961.0 ச. மீ ஜோகி மடம், மசூதி மற்றும் கபர்ஸ்தான் இடத்தினை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மசூதி நிர்வாகத்தால் கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்

மேற்படி சர்வே எண்ணில் உள்ள இடத்தில்  முருகேசன் என்பவர் பகுதியளவு நிலப்பரப்பினை பராமரித்தும் தென்னை மரங்கள் வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும், தொடர்ந்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்தும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில்

இன்று 20-06-2026 காலை  10.30 மணி முதல் மேற்படி புலத்தில் குடியாத்தம் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும்  குடியாத்தம் நகர சார் ஆய்வாளர். சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில்  நில அளவீடு பணி நடைபெற்றது.

இதில் இரு தரப்பினரிடமும் காவல் துணை கண்காணிப்பாளர். சுரேஷ். வட்டாட்சியர். பிரியா. நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி. நகர அமைப்பு அலுவலர். சீனிவாசன். நகர அளவையர். தீபா

ஆகியோர் ஆக்ரமணதாரர்   முருகேசன், மசூதி தரப்பினர், பேச்சுவார்த்தை நடத்தி அளவீடு செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!