மின்வெட்டு: சென்னையில் பல இடங்களில் மக்கள் போராட்டம்!!
சென்னையில் அம்பத்தூர் எஸ்.வி.நகர், விஜயலட்சுமிபுரம், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை; இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் - செங்குன்றம் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.சென்னையில் மாங்காடு, ரகுநாதபுரம், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மாங்காடு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்றிரவு போராட்டம்; அதிக புழுக்கம் நிலவும் சூழலில், மின்சாரம் இல்லாததால் கடும் சிரமத்தை சந்திப்பதாக மக்கள் வேதனை.சென்னையில் பெரம்பூர், கவியரசு கண்ணதாசன் நகர், எம்.ஆர். நகர், விவேகானந்தா நகர், கொடுங்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை நேற்றிரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக