முதியோர்களுக்கு உரிய முக்கியத்துவம் மரியாதை அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் - முதியோர்கள் வன் கொடுமை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் மனித சங்கிலியில் பங்கேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர். லீலா அலெக்ஸ் பேச்சு!!
வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள அரசு பெண்ட்லேண்ட் பல் நோக்கு மருத்துவமனையில் இன்று முதியோர் வன் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் முதியோர்களை பாதுகாத்து உரிய முக்கியத்துவம் அளிப்போம் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்
பின்னர் முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியும் நடைபெற்றது இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேசுகையில் கூட்டு குடும்பங்கள் அக்காலத்திலிருந்தது தற்போது மாறிவிட்டது அகையால் முதியோர்களுக்கு பல்வேறு பிரச்சணைகள் ஏற்படுகிறது நாம் அனைவரும் முதியவர்களுக்கு குடும்பத்தில் உரிய முக்கியத்துவத்தினையும் மரியாதையையும் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டுமென பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக