பண்ருட்டியில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு ஆதரவாக அவசர ஆலோசனைக் கூட்டம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பண்ருட்டி பாஜக நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய நிர்வாகிகள், அண்ணாமலை எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் தாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு ஆதரவு தெரிவிப்பதாக உறுதிபட தெரிவித்தனர். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும், அமைப்பு வலுப்படுத்தவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக