கன்னியாகுமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் கையுறைகள்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை பாராமல் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் முன்னெடுப்பில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கேப் ஸ்டார்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் (Sunglasses) மற்றும் கையுறைகள் (Gloves) வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, காவலர்களின் உடல்நலன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் மனிதநேய முயற்சியாக அமைந்தது. காவலர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காவல்துறை வட்டாரங்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர். பாலசுப்பிரமணியன்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் கலையரசன், நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.இளஞ்செழியன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். கோவிந்தராஜு மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!