பெரும்பாடி கிராமத்தில் மரங்களை வெட்டி தீ வைத்த நபரின் மீது ஊராட்சி நிர்வாகம் போலீசில் புகார்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராம எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக இயற்கை சூழலை பாதுகாக்கவும் கிராம அழகுக்காகவும் தெருக்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். இந்த மரங்களை பராமரிக்க நூறுநாள் வேலை பணியாளர்களை கொண்டு பல லட்சங்கள் அரசு பணத்தை செலவு செய்து தண்ணீர் ஊற்றுதல், களை எடுத்தல் பணிகளை செய்து பராமரித்து வருகிறது கிராம நிர்வாகம்.
இப்படி நான்கு ஆண்டுகளாக நல்ல நிலையில் வளர்த்து வந்த மரங்களை பார்த்து சமீபத்தில் பஞ்சாயத்தில் ஆய்வுக்காக வந்த மாவட்ட ஆட்சியர் சிறப்பாக மரங்களை வளர்த்துள்ளீர்கள் என்று பாராட்டிவிட்டு சென்றுள்ளர்.
இந்நிலையில் பெரும்பாடி புதுமனை பகுதியான மாசுபடா அம்மன் நகரில் உள்ள தெருவில் இருந்த மரங்களை அப்பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ள ஆதவன் என்று நபர் வீடு கட்டும் பணிகளுக்காக வரும் வண்டி வாகனங்களால் இடித்து சேதப்படுத்தி உள்ளர். இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவரும், அப்பகுதி வார்டு கவுன்சிலரும் நேரில் சென்ற சம்பந்தப்பட்ட நபரிடம் செடி, மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரைகள கூறி இருக்கிராகள்.
அதை ஊதாசினப்படுத்திய அந்த நபர் ஊராட்சி நிர்வாகம் எச்சரித்து விட்டு சென்ற ஒரு வாரத்திற்குள்ளாகவே 30/05/2026 அன்று 20 அடி அகல அரசு புறம்போக்கு தெரு ஓரம் உள்ள ஒரு நன்கு வளர்ந்த சுமார் பதினைந்து அடி உயர மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து உள்ளார். இதை அறிந்த அப்பகுதி வார்டு கவுன்சிலர் நேரில் சென்று அந்த நபரிடம் விசாரித்த போது நான் கட்டிவரும் வீட்டிற்கு இடைஞ்சலாக உள்ளது என்று வெட்டிவிட்டேன் என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார், இந்த பஞ்சாயத்தில் ஓட்டு உரிமை கூட இல்லாத நீங்கள் இந்த பஞ்சாயத்து பராமரித்து வரும் மரத்தை முறையான அனுமதி இல்லாமல் வெட்டியது மிக பெரிய தவறு என்று சொல்லிவிட்டு வந்த அந்த நாளின் மாலையே அவருக்கு எந்த விதத்திலும் இடைஞ்சல் இல்லாத தெருவின் எதிர்புறம் இருந்த சுமார் 20 அடி உயர மரத்தை தீ வைத்து எரியவைத்து இருக்கிறார்.
இதற்காக சம்பந்த பட்ட நபரின் குடும்பத்தாரை ஜூன் 6 சனிக்கிழமை அழைத்து பேசியபோது தகாத வார்தைகளை கூறி பஞ்சாயத்து நிர்வாகத்தை சேர்ந்தவர்களை திட்டி இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தை பஞ்சாயத்து நிர்வாகம் வட்டார வளர்ச்சி அலுவலரின் பார்வைக்கு கொண்டு சென்ற போது அவர் காவல் துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தியதின் படி நேற்று குடியாத்தம் தாலுக்கா காவல் நிலையத்தில் மரத்தை வெட்டியும், வேறு மரத்திற்கு தீ வைத்தும் பஞ்சாயத்து சொத்தை சேதப்படுத்திய ஆதவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு அளிப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக