கோவை அவிநாசி சாலையில் சிக்னலால் தலைவலி! மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை!!

கோவை மாவட்டம், கோவையின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்காக அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அவிநாசி சாலையின் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் சிக்னல் கொண்டு வரப்பட்டது. அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவல்துறை மீண்டும் அங்கு மாற்றம் செய்துள்ளது . 

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், " அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள், 13.06.2026 ஆம் தேதி முதல் 17.06.2026 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு டாமினோஸ் அருகில் உள்ள யூ டர்ன் தற்காலிகமாக மூடப்படுகிறது.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!