திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான அரசின் முடிவு என்ன?- மதுரை அமர்வு கேள்வி இந்தாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.இந்த உத்தரவுகளை எதிர்த்து எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, "அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.அரசுத்தரப்பில், "அது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.தர்கா தரப்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது.அதையடுத்து நீதிபதிகள், "உத்தரவு தொடர்பான அரசின் முடிவு என்ன? என்பது தொடர்பாக தெரிவிக்க அறிவுறுத்தி வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக