திருமயம் அரசு மருத்துவ மனையில் அமைச்சர். முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அரசு மருத்துவ மனையில் அமைச்சர். முகமது பர்வேஸ்  திடீர் ஆய்வு. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  அலுவலர்கள் வருகையை சரிபார்த்த அமைச்சர். வார்டுகள்,விபத்து சிகிச்சை மையம்  ஆகியவற்றை பார்வையிட்டு மருத்துவமனையை கிளீன் ஆக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,   இந்த மருத்துவமனைக்கு சிடி.ஸ்கேன்  கேட்டனர்.விரைவில் முதல்வரிடம் கூறி பெற்றுத்தருகிறேன்.அது போல பிரேத பரிசோதனை அறைக்கு புதிய கட்டடம் கேட்டனர்.அதற்கும்  கட்டடம் கட்ட நிதி ஒதுக்குகிறேன். உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். அதனை அரசின் விதிகளுக்குட்பட்டு நிறைவேற்றித்தருகிறேன்.என்றார். பின்னர் அவர் திருமயம் டவுன் அரசு ஆரம்ப்பள்ளி,அரசு மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!