தமிழக சட்டமன்ற கூட்டம் தொடர் நடைபெறும் நிலையில் விலை நிலத்தில் விவசாயிகள் அமர்ந்து தேர்தல் வாக்குறுதி அளித்த பயிர் கடன் தள்ளுபடி எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் இறைவனை வணங்கி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தியானத்தில் ஈடுபட்டனர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சட்டமன்ற கூட்டம் தொடர் நடைபெறும் வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த படி பயிர் கடன் தள்ளுபடி அளிக்காமல் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி அறிவித்த போதிலும் விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் இல்லாத காரணத்தால் விவசாயிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த வாக்குறுதியை எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக பயிர் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய நிலங்களில் விவசாயிகள் அமர்ந்து இறைவனை நோக்கியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு தியானத்தில் ஈடுபட்டனர்
இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவிப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக